< Back
சினிமா செய்திகள்
விக்ரமை சந்தித்த டோவினோ தாமஸ்
சினிமா செய்திகள்

விக்ரமை சந்தித்த டோவினோ தாமஸ்

தினத்தந்தி
|
23 April 2023 6:53 AM IST

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் நடிகர் நடிகைகள் ஈடுபட்டு உள்ளனர். தனி விமானத்தில் வெளி மாநிலங்களுக்கு சென்று வருகிறார்கள். கேரளாவுக்கும் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமை டோவினோ தாமஸ் சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்து அதை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில், "நான் விக்ரம் படங்களை பார்த்தே வளர்ந்தேன். விக்ரமின் அந்நியன் படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன். வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை அவர் தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். ஒரு ரசிகனாக விக்ரமை சந்தித்து பேசியது என் அதிர்ஷ்டம்'' என்று கூறியுள்ளார். டோவினோ தாமஸ் தமிழில் மாரி 2 படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்