< Back
சினிமா செய்திகள்
நடிகர் படத்திற்காக புதிய தோற்றத்தில் டொவினோ தாமஸ்
சினிமா செய்திகள்

'நடிகர்' படத்திற்காக புதிய தோற்றத்தில் டொவினோ தாமஸ்

தினத்தந்தி
|
14 March 2024 7:38 PM IST

டோவினோ தாமஸ் பழுப்பு நிற ஸ்வெட்டர் மற்றும் கார்கோ பேண்ட் அணிந்து, சன் கிளாசுடன், சிகரெட் புகைக்கும் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.

கொச்சி,

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷின் 'மாரி 2' படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த 'மின்னல் முரளி', '2018' ஆகிய படங்கள் தமிழிலும் வரவேற்பைப் பெற்றன. இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு 'நடிகர் ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ், சுராஜ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

'நடிகர்' படத்தில் டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டார் நடிகராக டோவினா தாமஸ் நடிக்கிறார். இதில் சவுபின் சாகிர், பாவனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டோவினோ தாமஸ் பழுப்பு நிற ஸ்வெட்டர் மற்றும் கார்கோ பேண்ட் அணிந்து, சன் கிளாசுடன், சிகரெட் புகைக்கும் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.

இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்