< Back
சினிமா செய்திகள்
Tovino Thomas announces release plans for highly-anticipated ARM.

image courtecy:twitter@ttovino

சினிமா செய்திகள்

3டி தொழில்நுட்பத்தில் டொவினோ தாமஸின் ஏ.ஆர்.எம்

தினத்தந்தி
|
12 Aug 2024 2:46 AM IST

ஏ.ஆர்.எம் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னை,

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன.

அடுத்து ஐடன்டிடி, அவரன், ஏ.ஆர்.எம் போன்ற படங்களில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இந்நிலையில், ஏ.ஆர்.எம் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்