கடந்த வாரத்தின் டாப் 5 கோலிவுட் செய்திகள்
|தமிழ் சினிமா அடிக்கடி அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமா, அடிக்கடி அப்டேட்டுகள் மற்றும் தகவல்கள் கொடுப்பதன் மூலம் தொடர்ந்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பேசு பொருளாகி இருக்கின்றன. அந்த வகையில், கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க விவாதத்தை தூண்டிய கடந்த வாரத்தின் டாப் 5 கோலிவுட் செய்திகளை தற்போது காணலாம்.
1.சினிமாவில் 32 ஆண்டுகள் நிறைவு செய்த அஜித்
நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளன. யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.
2.தி கோட் படத்தின் 3வது பாடல்
தி கோட் படத்தின் 3வது பாடலான ஸ்பார்க் வெளியானது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடலில் விஜய் மிகவும் இளமையான தோற்றத்தில் உள்ளார்
3.'வீர தீர சூரன்' பட 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. தற்போது, 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது
4.'மகாராஜா' பட டைரக்டரை பாராட்டிய ரஜினி
விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. இதனால், திரை பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி வந்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினார்.
5.மருத்துவமனையில் சாருஹாசன் அனுமதி
நடிகர் கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சாருஹாசன்(வயது 96). மகேந்திரன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான 'உதிரிப்பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் கடைசியாக விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடித்த ' ஹரா' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் வயது மூப்பின் காரணமாக திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.