பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..!
|இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.
சென்னை,
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98-வது படத்தில் நடிகர் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மாரீசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மான் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.