< Back
சினிமா செய்திகள்
பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!
சினிமா செய்திகள்

பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!

தினத்தந்தி
|
28 Nov 2023 1:14 PM IST

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் விஷால் நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார்.அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு 'விஷால் 34' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில் விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் விஷால் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அவர் அந்த பதிவில், விஷால் 34 படத்தின் டைட்டில் உடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தாமிரபரணி, பூஜை திரைப்படங்களுக்கு பிறகு விஷால் - ஹரி வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்