< Back
சினிமா செய்திகள்
அருண் விஜய் நடிக்கும் அச்சம் என்பது இல்லையே படத்தின் டைட்டில் மாற்றம்
சினிமா செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டைட்டில் மாற்றம்

தினத்தந்தி
|
4 April 2023 1:53 AM IST

அருண் விஜய் நடித்துள்ள 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது.

சென்னை,

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி' (mission chapter 1: fearless journey) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முழு உரிமையையும் லைகா புரொடக்சன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்