< Back
சினிமா செய்திகள்
பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
சினிமா செய்திகள்

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Jan 2024 1:50 PM IST

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இரவின் நிழல்' திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் (Non-Linear) திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத் தொடர்ந்து பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்