ஹாரர் படத்தில் நடிக்கும் 'டைட்டன்ஸ்' நடிகை
|டைட்டன்ஸ் எழுத்தாளருடன் மீண்டும் இணைந்துள்ளார் லெஸ்லி.
வாஷிங்டன்,
பிரபல காமிக் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் எட்வர்ட் ஹில். இவர் எழுத்தாளராக பணியாற்றிய 'டைட்டன்ஸ்' சீரிஸ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இதில், பிரபல ஹாலிவுட் நடிகை கோனோர் லெஸ்லி விண்டர் கேர்ளாகா நடித்திருந்தார்.
தற்போது எட்வர்ட் ஹில் ஹாரர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கும் இப்படத்திற்கு 'ஆர்கேஞ்சல்' என பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்தும் படம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் டைட்டன்ஸ் சீரிஸில் நடித்து பிரபலமான கோனோர் லெஸ்லி நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் டைட்டன்ஸ் எழுத்தாளருடன் லெஸ்லி மீண்டும் இணைந்துள்ளார். மேலும், ரெக் ஹோவனெசியன், அலிஷியா ஓச், அஸுர் பார்சன்ஸ் மற்றும் டிரெவர் ரிலே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த வாரம் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.