'இளமையாக இல்லை என்று என்னை...'- பாலிவுட் நடிகை வருத்தம்
|சினிமாவில் தனக்கு நடந்த வருத்தமான நிகழ்வை நினைவுகூர்ந்தார் நடிகை டிஸ்கா சோப்ரா.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை டிஸ்கா சோப்ரா. சுமார் 45 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் நடித்து வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த 'ருபாரு' என்ற குறும்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் டிஸ்கா சோப்ரா. இவர் கடைசியாக 'மர்டர் முபாரக்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் தனக்கு நடந்த வருத்தமான நிகழ்வை நினைவுகூர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது,
'கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு ஒரு படம் வந்தது. அப்போது, தயாரிப்பு, உடைகள், வரிகள் மற்றும் அனைத்து பணிகளையும் ஆரம்பித்தோம். படப்பிடிப்பு தொடங்கும் நான்கு நாட்களுக்கு முன்பு, இளமையாக இல்லை என்று என்னைவிட இளமையாக உள்ள நடிகை ஒருவரை இப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறினர். இதற்கு தயாரிப்பாளர்தான் காரணம் என்று பிறகுதான் தெரிந்தது.
அந்த நேரத்தில், சில விஷயங்கள் என் தலையில் ஓட ஆரம்பித்தன. நாம் சோகமான உலகத்தில் வாழ்கிறோம். அவர்கள் இளமை மற்றும் அழகானவர்களில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள். சினிமாவில் இளமையும், அழகும் மட்டுமே கவர்ச்சிகரமான விஷயங்களா?. அப்போது என் உள்ளம் அதற்கு எதிராக மாறியது'. இவ்வாறு கூறினார்.