< Back
சினிமா செய்திகள்
சென்னை:  ஜெயிலர் படத்திற்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன..!
சினிமா செய்திகள்

சென்னை: ஜெயிலர் படத்திற்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன..!

தினத்தந்தி
|
6 Aug 2023 11:39 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் 10-ந்தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பல நிறுவனங்கள் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அன்று விடுமுறை அளித்துள்ளதோடு தங்களது ஊழியர்களுக்கு டிக்கெட்டுகளையும் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

'ஜெயிலர்' திரைப்படம் இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக ஜெயிலர் படத்தின் பாடல்கள், டிரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. கடந்த ஜூலை 28 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்