< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சென்னையில் லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...!
|13 Oct 2023 2:41 PM IST
சென்னையில் லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.