'பாகுபலி' படத்தில் நடிக்க மறுத்த முன்னணி தமிழ் நடிகர் - யார் தெரியுமா?
|ராஜமவுலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் சில நடிகர்கள் மறுத்திருக்கின்றனர்.
சென்னை,
தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரமாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களால் இவர் மிகவும் பிரபலமானார்.
தற்போது இவர் படத்தில் நடிப்பது நடிகர்களின் கனவாக உள்ளது.
முன்பு, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கடைத்தபோதிலும் சில நடிகர்கள் மறுத்திருக்கின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா. ராஜமவுலி படத்தில் பணிபுரியும் வாய்ப்பை இழந்ததாக பல பேட்டிகளில் சூர்யாவே கூறியுள்ளார்.
இது குறித்து சூர்யா, பாகுபலியில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமவுலி தன்னை அணுகியதாகவும், ஆனால், தான் அதை மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்த சூர்யா, பாராட்டப்பட்ட இயக்குனருடன் பணிபுரியும் மற்றொரு வாய்ப்பை இழக்க மாட்டேன் என்றும் கூறினார்.