பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - இயக்குனர் ராஜமவுலி ருசிகர தகவல்
|பிரபாஸ், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து இயக்குனர் ராஜமவுலி பேசியுள்ளார்.
சென்னை,
பிரபல இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, பிரபாஸ் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்பது குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர்,
'பிரபாஸ் மிகவும் சோம்பேறி, 'திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்'. இவ்வாறு கூறினார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபாஸ் கூறியதாவது, 'சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது. இந்த மூன்று பிரச்சினைகள் எனக்கு உள்ளன. நான் நிஜ வாழ்க்கையில்தான் கூச்சப்படுகிறேன், கேமரா முன் இல்லை'. இவ்வாறு கூறினார்.