அமலாபால் நடிக்கும் 'கடாவர்' படத்தின் டிரைலர் வெளியானது..!
|நடிகை அமலாபால் நடித்துள்ள 'கடாவர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'கடாவர்'. இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். அமலா பாலின் இந்த புதிய கதாபாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
'கடாவர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'கடாவர்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.