< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெய் ஆகாஷின் `திரில்லர்' கதை
|6 Jan 2023 10:32 AM IST
ஜெய் ஆகாஷ் நடிப்பில் ‘ஜெய் விஜயம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளார். கதாநாயகிகளாக அக்ஷயா கண்டமுத்தன், கீக்கி வாலஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ராஜேந்திரன், டாக்டர் சரவணன், மைக்கேல் அகஸ்டின் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறும்போது, ``நாயகன் மனைவி, தந்தை, தங்கையோடு வாழ்கிறான். ஒரு கட்டத்தில் தந்தை, மனைவியாக இருப்பவர்கள் போலியானவர்கள் என்று அவன் சந்தேகித்து போலீசில் புகார் செய்கிறான். ஒரு கொலைப் பழியும் அவன்மேல் விழுகிறது. தந்தை, மனைவி நிஜமாகவே போலியானவர்களா? உண்மை கொலையாளி யார்? போன்றவற்றுக்கு விடையாக சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிறது''. பாடல் இசை: தேவா, பின்னணி இசை: சதீஷ்குமார், ஒளிப்பதிவு: பால்பாண்டி, ஆனந்த், சதீஷ்.