மிரட்டல் எதிரொலி: படப்பிடிப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் கங்கனா ரனாவத்
|கங்கனா ரனாவத் தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'தாம் தூம், ' மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்துள்ள கங்கனா ரனாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் இந்தி திரையுலகில் 'வாரிசு' நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக சாடினார்.
விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்தார். மராட்டிய அரசின் செயல்பாடுகளை கண்டித்தார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கும் சம்பவமும் நடந்தது. இந்தநிலையில் தனக்கு மிரட்டல்கள் வருவதாக கங்கனா ரனாவத் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்று வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்கு கங்கனா ரனாவத் செல்லும்போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் அவருக்கு பாதுகாப்பாக செல்கிறார்கள்.