< Back
சினிமா செய்திகள்
இது அஜித் எடுத்தது... யோகிபாபு பகிர்ந்த புகைப்படம் வைரல்
சினிமா செய்திகள்

இது அஜித் எடுத்தது... யோகிபாபு பகிர்ந்த புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
29 Aug 2024 11:30 AM IST

'வேதாளம்' படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்குமார் எடுத்த புகைப்படத்தை யோகிபாபு பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேதாளம்'. இப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகர் சூரி, தம்பி ராமையா, ராகுல் தேவ், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தீபாவளி பண்டிகையன்று வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தினை அஜித் குமாரின் 'ஆரம்பம், என்னை அறிந்தால்' போன்ற திரைப்படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வேதாளம் படப்பிடிப்பின் போது நடிகர் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனை வைத்து நடிகர் அஜித் குமார் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகி பாபு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்