< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா, திரிஷாவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா - எதில் தெரியுமா?
சினிமா செய்திகள்

நயன்தாரா, திரிஷாவை 'ஓவர் டேக்' செய்த ராஷ்மிகா - எதில் தெரியுமா?

தினத்தந்தி
|
16 Jun 2024 9:11 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ‘சிக்கந்தர்' படத்தில் ராஷ்மிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

தற்போது, இவர் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் ராஷ்மிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம், பிரபல நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷாவை சம்பள விசயத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா 'ஓவர் டேக்' செய்து இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் நயன்தாரா மற்றும் திரிஷா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.

மேலும் செய்திகள்