இது தான் நான் 2023ம் ஆண்டில் கற்றுக்கொண்டது... ரசிகர்களுக்கு நடிகை கங்கனா ரணாவத் அறிவுரை
|இந்த ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் 'சந்திரமுகி 2' மற்றும் 'தேஜஸ்' படங்கள் வெளியாகின.
சென்னை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படமும் மற்றும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த டிக்கு வெட்ஸ் சிரு திரைப்படமும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் நடிகை கங்கண ரணாவத் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் அந்த பதிவில், 'நான் வீட்டை விட்டு வெளிய இருப்பதாய் விரும்புகிறேன், நான் பல மைல்கள் கடந்து எனக்கான கனவு இல்லங்கள் மற்றும் பண்ணை வீடுகளை கட்டி உள்ளேன்.
வீட்டில் இல்லாதபோது தான் நான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர்ந்தேன். நாம் இந்த உடலை சார்ந்தவர்கள் அல்ல, வாழ்க்கை என்பது ஒரு விரைவான கட்டம் என்பது எனக்கு இப்போதுதான் தெரிய ஆரம்பித்துள்ளது. எப்போதும் வீட்டில் இருக்க முயற்சிக்க கூடாது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது தான் நான் 2023ம் ஆண்டில் கற்றுக்கொண்டது. நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் வீட்டிற்கு செல்வதை போன்று நினைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.