படத்தயாரிப்பின் மிக பயங்கரமான பகுதி இதுதான்... மாளவிகா மோகனன் பதிவு..!
|'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'தங்கலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள மாளவிகா, "எனக்கு, படத்தயாரிப்பின் மிக பயங்கரமான பகுதி டப்பிங்தான். தயவுசெய்து நான் டப்பிங் செய்யும்போது, யாராவது வந்து என் கையை பிடித்துக்கொள்ள முடியுமா?" என்று கூறியுள்ளார்.
'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.