< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
"இனிமேல்" ஆல்பம் பாடலில் நடிக்க இதுதான் காரணம் - லோகேஷ் கனகராஷ்
|27 March 2024 9:07 AM IST
"இனிமேல்" ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "இனிமேல்" ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், "இனிமேல்" ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லோகேஷ், தான் ஏன் இந்த ஆல்பம் பாடலில் நடித்தேன் என்பது குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
நான் இந்த ஆல்பத்தில் நடித்ததற்கு 3 காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த பாடலின் படப்பிடிப்பு 3 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இரண்டு, ஸ்ருதி ஹாசன் மற்றும் கமல் ஹாசன் சார். மூன்று, படக்குழுவினர். இந்த காரணங்களுக்காக மட்டும்தான் நான் "இனிமேல்" ஆல்பம் பாடலில் நடித்தேன். இவ்வாறு கூறினார்