'என்னுடைய உயிர் இதுதான்' - நடிகை வரலட்சுமி
|திருமணம் முடிந்த பின் வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவுக்கும் கடந்த 10-ந் தேதி தாய்லாந்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது வரலட்சுமி - நிகோலய் திருமண புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், திருமணம் முடிந்த பின் சென்னையில் சரத்குமார் மற்றும் நிக்கோலயுடன் வரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடைய காதல் நிக்கோலய் சச்தேவ்தான். ஆனால் என் உயிர் சினிமா. பலர் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நான் நிச்சயமாக தொடர்ந்து நடிப்பேன். நீங்கள் எனக்கு எப்போதும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கொண்டே இருங்கள்', என்றார்.