'இது உங்களின் மற்றொரு சாதனை' - பிரதமர் மோடியை பாராட்டிய நடிகர் விஷால்
|அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
சென்னை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் விஷால் பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் மற்றுமொரு சாதனை இது. உங்களுக்கு எனது வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம்.
ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள். உங்களுக்கு எனது சல்யூட் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.