< Back
சினிமா செய்திகள்
இது வேற மாதிரி பாட்டாச்சே... ஜொர்தால பாடலை வெளியிட்ட ருத்ரன் படக்குழு
சினிமா செய்திகள்

இது வேற மாதிரி பாட்டாச்சே... 'ஜொர்தால' பாடலை வெளியிட்ட 'ருத்ரன்' படக்குழு

தினத்தந்தி
|
13 April 2023 1:47 AM IST

'ருத்ரன்' திரைப்படத்தின் 'ஜொர்தால' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார். 'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 'ஜொர்தால' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 24 மணி நேரத்தில் யூடியூப்பில் இந்த பாடல் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்