< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' படத்தின் டிரைலர் வெளியானது
|4 April 2023 2:53 AM IST
அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இந்த படத்தில் நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரஃப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அருள்நிதி செவித்திறன் குறைபாடுள்ள இளைஞனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சிண்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் 'திருவின் குரல்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந்தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.