உடல் எடையை பார்த்து என்னை கேலி செய்தனர் - நடிகை வித்யா பாலன்
|உடல் எடையை பார்த்து என்னை கேலி செய்தனர் என நடிகை வித்யா பாலன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யா பாலன், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார். தனது உடல் எடை கூடியதால் எதிர்கொண்ட சங்கடங்கள் குறித்து வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், "சிறு வயது முதலே நான் குண்டாக இருப்பேன். சினிமா துறைக்கு வந்ததும் எல்லோரும் என் உடல் எடையை பார்த்து கேலி செய்தனர். இதனால் என் உடலை நானே வெறுக்க ஆரம்பித்தேன். விபரீதமான கோபம், இனம்புரியாத மன உளைச்சல் வந்தது.
அதன் பிறகு என் உடம்புக்கு என்ன குறை அனைத்து அவயங்களும் நன்றாகவே இருக்கின்றன. இன்னும் என்ன தேவை என்று தோன்றியது. அதன் பிறகு நான் யார் என்ன பேசினாலும் கண்டுகொள்வதை விட்டுவிட்டேன். என் உடல் குண்டாக இருக்கிறதா, ஒல்லியாக இருக்கிறதா என்று யோசிக்காமல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மட்டும் யோசிக்க ஆரம்பித்தேன். இப்பொழுது ஆனந்தமாக இருக்கிறேன். யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக உங்களை நீங்கள் வெறுக்காதீர்கள். அடுத்தவர்களுக்காக மாற வேண்டும் என நினைக்காதீர்கள்" என்றார்.