நான் அழகாய் இல்லை என்று அவமதித்தனர் - 'பொன்னியின் செல்வன்' நடிகை வருத்தம்
|தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சோபிதா துலிபாலா ஆரம்ப காலத்தில் எதிர் கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் மாடலாக பணியாற்றிய நாட்களில் மும்பையில் நிறைய கம்பெனிகளுக்கு வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அடிக்கடி ஆடிஷனுக்கு சென்றேன். யாரும் எனக்கு வாய்ப்புகளை கொடுக்கவில்லை. நான் அழகாகவும் கவர்ச்சியாகவும் இல்லை என்று ஒரு கம்பெனியினர் என் முகத்தில் அறைந்ததுபோல் சொன்னார்கள். நான் அவர்களிடம் ஆமாம் என்று பதில் சொல்லி விட்டு வந்து விட்டேன். எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு கம்பெனியின் வர்த்தக விளம்பரத்திற்காக சென்றேன். அவர்கள் அழகிகளின் பின்னால் மாடலாக நிற்க கூட நீ உபயோகப்பட மாட்டாய் என்று நிராகரித்தார்கள்.
ஆனால் அதே கம்பெனி நான் பிரபலமானதும் அவர்கள் நிறுவனத்தின் வர்த்தக தூதுவராக என்னை நியமித்தது. ஐஸ்வர்யாராயுடன் இணைந்து அந்த கம்பெனி விளம்பரத்தில் நடித்தேன்" என்றார். நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.