< Back
சினிமா செய்திகள்
மோசமாக நடந்தார்கள் - இயக்குனர்கள் மீது பிரபல நடிகை புகார்
சினிமா செய்திகள்

'மோசமாக நடந்தார்கள்' - இயக்குனர்கள் மீது பிரபல நடிகை புகார்

தினத்தந்தி
|
25 July 2023 11:50 AM IST

நடிகையாக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இந்த நிலையில் நடிகையாக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறும்போது, "நான் பட வாய்ப்பு கேட்டு சென்றபோது சில இயக்குனர்கள் மோசமாக நடந்து கொண்டனர். ஆபாசமாக பேசினார்கள். ஒரு இயக்குனர் என்னிடம் எல்லை மீறியபோது உங்களுக்கு திருமணமாகி விட்டது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றேன்.

அதற்கு அவர் எனது மனைவியுடன் நான் இணக்கமாக இல்லை. நாங்கள் ஒற்றுமையாகவும் இல்லை என்றார். இப்படி எத்தனையோ பேரிடம் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு கிட்னி பாதித்தது. குடும்பத்தினர் யாரும் கிட்னி தானம் கொடுக்க முன்வரவில்லை. மூன்று மாதங்கள் மருந்து சாப்பிட்டு குணமானேன். எனக்கு உதவாத குடும்பத்தினர் மீது நான் அக்கறை காட்டுவது இல்லை. இப்போதும் அவர்களை விட்டு விலகியே இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்