இந்தியில் ரீமேக் ஆகும் தெறி... தயாரிப்பாளராக களமிறங்கும் அட்லீ...!
|இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிப்பதாகவும் பேசப்பட்டது.
சென்னை,
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'. இதில் சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன், மனோபாலா, டைரக்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற மாஸ் சண்டை காட்சிகள், பன்ச் வசனங்களை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிப்பதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி காளீஸ் இயக்கும் இப்படத்தில் வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை அட்லீ தயாரிக்க உள்ளார்.
இன்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த விடியோவை அட்லி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.