அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது - நடிகை அஞ்சலி
|நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன் என்று நடிகை அஞ்சலி கூறினார்.
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, 37 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே பரவிய வதந்திகளை மறுத்தார்.
இந்த நிலையில் திருமணம் குறித்து நடிகை அஞ்சலி கூறியதாவது:-
சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டார்கள். முதலில் இதுபோன்ற திருமண வதந்திகள் வந்தபோது வீட்டில் அனைவரும் கவலைப்பட்டனர். சில நாட்கள் வரை அது பெரும் பரபரப்பாக இருக்கும். இப்போது யாரும் கண்டு கொள்வதே இல்லை.
என் திருமணத்தை பற்றி வந்த வதந்திகள் காரணமாக நான் ஒரு பையனை அழைத்துச்சென்று இவனைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னால் கூட வீட்டில் யாரும் நம்ப மாட்டார்கள். நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடிப்பேன்.
கதாநாயகியாக நடிக்காமல் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கிறீர்களே ஏன்? என்று சிலர் கேட்கிறார்கள். எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்காது. 50 படங்களை தாண்டி வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.