< Back
சினிமா செய்திகள்
சைக்கிள் வாங்கக்கூட வழியில்லை - பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசளித்த நடிகர் பாலா
சினிமா செய்திகள்

'சைக்கிள் வாங்கக்கூட வழியில்லை' - பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசளித்த நடிகர் பாலா

தினத்தந்தி
|
18 March 2024 12:03 PM IST

சைக்கிள் வாங்கக்கூட வழியில்லை என்று அந்த ஊழியர் கூறினார்.

சென்னை,

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.

இந்த நிலையில், பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், பெட்ரோல் போடவந்த நபரின் ஹெல்மெட்டில் இருந்த கேமரா எவ்வளவு என அந்த இளைஞர் கேட்டதற்கு 46 ஆயிரம் ரூபாய் என அந்த நபர் கூறுகிறார். அதற்கு சிரித்துக் கொண்டே, எங்கள் வீட்டில் பைக் வாங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால் அடிப்பேன் என்கிறார்கள், சைக்கிள் வாங்கக்கூட வழியில்லை என்று அந்த இளைஞர் கூறுகிறார். முகத்தில் சிரிப்பு மனதில் வருத்தத்தோடு இளைஞர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, அந்த இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்கு மாஸ்க் அணிந்தபடி பைக்கில் செல்லும் பாலா அங்கு பெட்ரோல் நிரப்புகிறார். பின்னர் மாஸ்க்-யை எடுத்துவிட்டு அந்த இளைஞரிடம் பைக் சாவியை கொடுக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் அவரை கட்டி அணைக்கிறார். பின்னர் இருவரும் பைக்கில் சில தூரம் பயணம் செய்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்