< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
என்னவிட கெட்டவன் எவனும் இல்ல... வைரலாகும் 'அனிமல்' படத்தின் டீசர்
|28 Sept 2023 10:37 PM IST
ரன்பீர் கபூர் நடித்துள்ள 'அனிமல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.