< Back
சினிமா செய்திகள்
எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் -  நடிகை பகிர்ந்த சர்ச்சை கருத்து
சினிமா செய்திகள்

எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் - நடிகை பகிர்ந்த சர்ச்சை கருத்து

தினத்தந்தி
|
19 April 2024 9:41 AM IST

உடன்பட்டாலும் வாய்ப்பு இல்லை என்று நடிகை ஹிமஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக ஏற்கனவே பல நடிகைகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகையும், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான நடிகை ஹிமஜாவும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.

ஹிமஜா கூறும்போது, "தெலுங்கு சினிமா துறையில் தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தருவது இல்லை என்று பல நடிகைகள் ஏற்கனவே குறை கூறி உள்ளனர். படுக்கைக்கு சம்மதித்து ஒத்துழைப்பு கொடுத்தாலும் பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இது எனக்கு நன்றாக தெரியும். அதற்காக வாய்ப்பு பெற்றவர்கள் எல்லாம் படுக்கைக்கு உடன்பட்டவர்கள் என்று அர்த்தம் இல்லை.

தெலுங்கில் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இங்கு இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை. எனது சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்