< Back
சினிமா செய்திகள்
வலைத்தளத்தில் பரபரப்பு... ஹன்சிகாவுக்கு ஹீரோ பாலியல் சீண்டலா?
சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் பரபரப்பு... ஹன்சிகாவுக்கு ஹீரோ பாலியல் சீண்டலா?

தினத்தந்தி
|
25 May 2023 6:53 AM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகா தொழில் அதிபர் சோஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹன்சிகா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "தெலுங்கில் ஒரு முன்னணி கதாநாயகன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தன்னுடன் வரும்படி தொடர்ந்து அழைத்து துன்புறுத்தினார். அந்த நடிகருக்கு நான் சரியான பாடம் புகட்டி விட்டேன்'' என்று கூறியதாகவும், அந்த நடிகர் பெயரை அவர் தெரிவிக்கவில்லை என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் யார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்தான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஹன்சிகா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ஹன்சிகா வெளியிட்ட பதிவில், "நான் இதுபோன்ற கருத்தை எந்த பேட்டியிலும் தெரிவிக்கவில்லை. தயவு செய்து உண்மைக்கு மாறான தகவலை வெளியிட வேண்டாம். ஏதேனும் தகவல் கேள்விப்பட்டால் அது உண்மைதானா என்று விசாரித்து வெளியிடுங்கள்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்