< Back
சினிமா செய்திகள்
வெந்து தணிந்தது காடு 2 உருவாக வாய்ப்பு இருக்கிறது - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
சினிமா செய்திகள்

'வெந்து தணிந்தது காடு 2' உருவாக வாய்ப்பு இருக்கிறது - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

தினத்தந்தி
|
18 May 2024 9:49 AM IST

'வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார்.

சென்னை,

தற்போது கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாகவும், காஷ்மீரா பர்தேஷி நாயகியாகவும் நடித்துள்ள படம் 'பி.டி.சார்'. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பட நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, ''நான் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து எங்களின் வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் நடிப்பதாக தெரிவித்து உள்ளார்.

நடிகர் சிம்பு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் நான் அளித்த புகார் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று தடுக்கவில்லை.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. 'பி.டி.சார்' படம் சிறப்பாக வந்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும்'' என்றார்.

மேலும் செய்திகள்