"பிறகு பேசிக்கொள்ளலாம் நியாயங்களை; போரை நிறுத்துங்கள் முதலில்..." - வைரமுத்து
|நியாயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் போரை நிறுத்துங்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர்,
"கவலை சூழ்கிறது நள்ளிரவில் தூக்கம் அழிகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளிலும்
போரைத் தொடுத்தவர்களைவிட
சம்பந்தமில்லாதவர்களே சாகிறார்கள்
பிறகு பேசிக்கொள்ளலாம் நியாயங்களை;
போரை நிறுத்துங்கள் முதலில்
கருகும் தேசங்களில் ஒலிவம்பூக்கள் பூக்கட்டும்
யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.