30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல்
|வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 'வாரிசு' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'தீ தளபதி' பாடல் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.