"தீ இது தளபதி" - வெளியானது வாரிசு படத்தின் 2வது பாடல்..!
|பாடாலாசிரியர் விவேக் வரிகளில் ,இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது
இந்நிலையில் வாரிசு படத்தின் 2வது பாடல் (இன்று) வெளியாகியுள்ளது . பாடாலாசிரியர் விவேக் வரிகளில் ,இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
1M+ real time views now
— Sri Venkateswara Creations (@SVC_official) December 4, 2022
THALAPATHEE #TheeThalapathy ▶️ https://t.co/ULvDBSqNaC
️ @SilambarasanTR_ sir
@MusicThaman
️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @iamRashmika pic.twitter.com/Mb0dGIEBkK