< Back
சினிமா செய்திகள்
சார் ஒரே ஒரு செல்பி: கோபத்தில் போனை பிடிங்கிய பாகுபலி ராணா..!
சினிமா செய்திகள்

'சார் ஒரே ஒரு செல்பி': கோபத்தில் போனை பிடிங்கிய பாகுபலி ராணா..!

தினத்தந்தி
|
15 Sept 2022 4:27 PM IST

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராணா செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பிடிங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

திருப்பதி,

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார்.

இந்த நிலையில் பாகுபலி புகழ் வில்லன் நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்தார்.

ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர்.

அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடிங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.



மேலும் செய்திகள்