< Back
சினிமா செய்திகள்
வாலிபர் பின் தொடர்வதாக இளம் நடிகை போலீசில் புகார்
சினிமா செய்திகள்

வாலிபர் பின் தொடர்வதாக இளம் நடிகை போலீசில் புகார்

தினத்தந்தி
|
4 March 2023 7:20 AM IST

பிரபல இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுராசியா. இவர் ஐதராபாத்தில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்னாலேயே வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் செய்தார்.

ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நடிகை ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் அளித்தார். வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்று உறுதிப்படுத்தினர். 2021-ல் இதே பூங்காவில் நடிகை ஷாலு நடைபயிற்சி சென்றபோது ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போது ஷாலு கூச்சல் போட்டதால் அவரது பர்ஸ், செல்போனை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அந்த பயத்தில் இன்னமும் இருப்பதாலேயே நடைபயிற்சி செய்தவர் தன்னை பின் தொடர்வதாக ஷாலு புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகைக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்