< Back
சினிமா செய்திகள்
தண்ணீர் வா வா என்று அழைத்தது... பேக் அப் என்று கேட்டதும் ஒரே குதி - ஒகேனக்கலில் குளித்தபடி நடிகர் விக்ரம்
சினிமா செய்திகள்

'தண்ணீர் வா வா என்று அழைத்தது... 'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி' - ஒகேனக்கலில் குளித்தபடி நடிகர் விக்ரம்

தினத்தந்தி
|
5 Dec 2022 9:06 PM IST

ஒகேனக்கலில் தங்கலான் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் ஆற்றில் குளித்து விளையாடினர்.

சென்னை,

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கலில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கதில் கூறியிருப்பதாவது,

இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு. கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.'பேக் அப்' என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன? அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்