கோட் படத்தின் 'சின்ன சின்ன கண்கள்' பாடலின் வீடியோ வெளியானது
|'கோட்' திரைப்படம் ரூ. 413கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை,
லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். 'கோட்' திரைப்படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 413கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோட் படத்தில் இடம்பற்றுள்ள 'சின்ன சின்ன கண்கள்' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது .
A song that captures the sweetest emotions
— AGS Entertainment (@Ags_production) September 18, 2024
Our lovable #Thalapathy , #U1 & the phenomena #Bhavatharini in perfect harmony ❤️
Watch #ChinnaChinnaKangal full video now!
Chinna Chinna Kangal ▶️ : https://t.co/SpiEVAveVt
Ninnu Kanna Kanulae ▶️ : https://t.co/e7kgo4ZTGu… pic.twitter.com/5XLW6DhDUR