< Back
சினிமா செய்திகள்
ஜீவா, மம்முட்டி நடித்துள்ள யாத்ரா-2 படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

ஜீவா, மம்முட்டி நடித்துள்ள 'யாத்ரா-2' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
4 Feb 2024 2:59 PM IST

'யாத்ரா-2' திரைப்படம் வருகிற 8-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை, 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி உள்ளது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'யாத்ரா-2' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'யாத்ரா-2' திரைப்படம் வருகிற 8-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்