< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'சைத்ரா' படத்தின் டிரைலர் வெளியானது..!
|16 April 2023 10:42 PM IST
நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'சைத்ரா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
பொட்டு, கா உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'. மார்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எலிசா படத்தொகுப்பு செய்கிறார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக 'சைத்ரா' உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.