< Back
சினிமா செய்திகள்
விமல் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விமல் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
24 Aug 2023 1:52 AM IST

விமல் நடித்துள்ள 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விமல் தற்போது இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ், சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒடியன் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக 'துடிக்கும் கரங்கள்' திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்