< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடிக்கும் 'பிச்சைக்காரன் -2' படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
|28 April 2023 2:41 PM IST
திரைப்படம் வரும் மே 19ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.
இந்த நிலையில், 'பிச்சைக்காரன் -2' படத்தின் ட்ரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 19ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.