< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் 'தண்டர்போல்ட்ஸ்' படத்தின் டிரெய்லர்

தினத்தந்தி
|
25 Sept 2024 6:42 PM IST

'தண்டர்போல்ட்ஸ்' படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்,

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். இதை பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்க எரிக் பியர்சன் கதை எழுதி உள்ளார். இவர் பிளாக் விடோ, தோர்:ரக்னராக் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதி பிரபலமானவர்.

'தண்டர்போல்ட்ஸ்' படத்தில், லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், ஹாரிசன் போர்டு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் 'பிளாக் விடோ' படத்தில் நடித்திருந்த புளோரன்ஸ் பக் மற்றும் டேவிட் கார்பரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், 'தண்டர்போல்ட்ஸ்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்