< Back
சினிமா செய்திகள்
விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விமல் நடித்துள்ள 'தெய்வ மச்சான்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
7 April 2023 10:15 PM IST

விமல் நடித்துள்ள 'தெய்வ மச்சான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா ஜா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தெய்வ மச்சான்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்