< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் டிரைலர் வெளியானது..!
|24 July 2022 3:20 AM IST
நடிகர் சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் கடந்த 1972-ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
தற்போது இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சிவாவுக்கே உரிய காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.